நம்பியூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை
கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கோபி அருகே நம்பியூர் சேர்ந்தவர் அனிதா (வயது 40). இவர் குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு பிறந்த மகன் மாரிமுத்து (22). திருப்பூர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.அனிதா கடந்த 6 வருடங்களுக்கு முன்பு, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, அதிக மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது, அருகில் இருந்தவர்கள் அனிதாவை காப்பாற்றினார்.இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனிதா தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.