ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் இடமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2021-11-30 00:30 GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி,  3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி கோவை சரகத்தில் கோவை, திருப்பூர். நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றி வந்த 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை, கோவை சரகடிஐ.ஜி. முத்துசாமி நேற்று பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கோபிநாத். உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக, கோவை மாநகர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வி.நிர்மலா நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மசுதாபேகம், பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கும், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி, கோபி போலீஸ் நிலையத்துக்கும், கோவை சென்ட்ரல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா, நம்பியூர் போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பெருந்துறை, கோபி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய சண்முகம், சுகவனம் ஆகியோர் சேலம் சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News