பவானி அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்- டிரைவர் தப்பி ஓட்டம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-06-16 12:13 GMT

பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் ரேஷன் அரிசி.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தார் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. போலீசார் சோதனையின்போது ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து  சரக்கு வாகனம் மற்றும் வாகனத்தில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மாவட்ட குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தப்பியோடிய ஓட்டுனரை பவானி போலீசார் தேடி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் பவானி சுற்று வட்டார பகுதியில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. எனவே தனிப்படை அமைத்து கண்காணிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News