அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது‌

அந்தியூர் அருகே சட்டவிரோதமாக மது விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-05-15 13:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காந்திபுரம் காலனியை சேர்ந்த நாராயணன் (61) என்பவர் அவருடைய வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News