கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் பான்மசாலா பாக்கெட் பதுக்கியவர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் 2 மூட்டை பான்மசாலா பாக்கெட்டுகளை பதுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-23 10:30 GMT

கைது செய்யப்பட்ட சரவணக்குமார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்மசாலா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மகன் சரவணக்குமார் என்பவர் பான்மசாலா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்ததில், 2 மூட்டைகளில் 1500 பான்மசாலா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சரவணக்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து பான்மசாலா பாக்கெட்டுகளை  பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News