பங்களாப்புதூர் தலைமை காவலர் கடம்பூர் மலையில் குதித்து தற்கொலை

பங்களாபுதூர் காவல் நிலைய தலைமை காவலர் கடம்பூர் மலைப்பாதையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-02-26 00:00 GMT

காவலர் வேலுச்சாமி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அந்தியூர் நகலூரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் தலைமை காவலர். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 7 வயதில் நித்தின் என்ற மகனும், 2 வயதில் ஹரீஸ் என்ற மகனும் உள்ளனர். வேலுச்சாமிக்கும் அவரது மனைவிக்குமிடையே கடந்த சில நாட்களாகவே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் சென்ற வேலுச்சாமி,  நேற்று வேலைக்கு செல்லவில்லை. கடம்பூர் அருகே உள்ள மல்லியதுர்கம் கோன்பாறை என்ற இடத்தில்,  எஸ் வடிவ மலைப்பாதையில் வேலுச்சாமியின் கார் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பது தெரியவந்தது. அந்த வழியாக சென்றவர்கள்,  இதுகுறித்து கடம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்தது, கடம்பூர் காவல் நிலைய போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, பள்ளத்தில் குதித்து வேலுச்சாமி உயிருக்கு போராடிய நிலையில் இருப்பது தெரிய வந்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றபோது,  வழியில் உயிரிழந்தார்.  வேலுச்சாமியின் உடல், உடற்கூறு ஆய்விற்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News