அம்மாபேட்டை அருகே இரு சக்கர வாகனத்தை திருட முயற்சி செய்த இளைஞர்கள் கைது
அம்மாபேட்டை அருகே மது போதையில் இரு சக்கர வாகனத்தை திருட முயற்சி செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.;
கைது செய்யப்பட்ட சக்திவேல் மற்றும் அபிஷேக்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள அம்மாப்பேட்டை அருகே உள்ள முளியனூர் பகுதியை சேர்ந்தவர் நீலமேகம்.நேற்று இரவு இவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை இரண்டு இளைஞர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த நீலமேகம் மற்றும் அப்பகுதியினர் இரண்டு பேரையும் பிடித்து அம்மாப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தியதில், ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அய்யங்காடு பகுதியை சேர்ந்த அபிஷேக், சுமைத்தூக்கும் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் பூதப்பாடிக்கு லோடு இறக்குவதற்கு வந்ததும் மதுபோதையில் அங்கிருந்து நடத்தே வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.