சித்தோடு அருகே போக்சோ சட்டத்தின் கீழ் கட்டிட தொழிலாளி கைது
சித்தோட்டில் 11ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.;
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். கட்டுமான கூலித் தொழிலாளி. இவர், சித்தோடு பகுதியை சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத 11ஆம் வகுப்பு மாணவியிடம், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஜனவரி மாதம் கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சித்தோடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கார்த்தி தேடிவந்தனர்.
இந்நிலையில், சாஸ்திரி நகர் பகுதியில் இருந்த இளைஞர் கார்த்திகை, சித்தோடு போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், திருமணம் செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கட்டுமான தொழிலாளி கார்த்திகை கைது செய்தனர். பின்னர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.