அம்மாபேட்டையில் ஒரு ரூபாய் தகராறில் தனியார் பேருந்து கண்ணாடி உடைப்பு
Police arrested Valiparai who broke the glass of a private bus in a rupee dispute near Bhavani;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டூருக்கு நேற்று காலை தனியார் பேருந்து சென்று புறப்பட்டு சென்றது. அப்போது, அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி பேருந்து நிறுத்தத்தில் ஏறிய வாலிபர் அம்மாபேட்டை செல்வதற்கு ரூ.10 கொடுத்து டிக்கெட் வாங்கினார். பேருந்து கண்டக்டரான கவியரசன் ( 24) சில்லறையை ரூ.1 குறைவாகக் கொடுத்ததோடு அம்மா பேட்டையில் இறங்கும் போது பெற்றுக்கொள் என்று கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்ததோடு தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
இதனையடுத்து, அம்மாபேட்டை வந்ததும்பேருந்தை விட்டு இறங்கிய வாலிபர் திடீரென கல்லை எடுத்து எறிந்து பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கண்டக்டர் கவியரசன் அந்த வாலிபரை விரட்டிப் பிடித்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் பூதப்பாடி சின்னமுழியனூரைச் சேர்ந்த சின்னதுரை மகன் பூபதி (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.