ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது!

ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-05-07 06:00 GMT

ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு காசிபாளையம் ரயில்வே தண்டவாள பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், ஈரோடு அருகே சோளங்காபாளையத்தை சேர்ந்த பாண்டியனின் மகன் தர்மன் (வயது 24) மற்றும் ஈரோட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் இருவரும் திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் காலனியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் பெங்களூரு- கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பூர் சென்றபோது அவரிடம் இருந்து செல்போன் திருடியதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், பிரசாந்திடம் இருந்து திருடப்பட்ட செல்போனை மீட்டனர்.

Similar News