சத்தியமங்கலம்: அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கடம்பூர் பகுதியில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கிவைத்திருப்பதாக கடம்பூர் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதைத்தொடர்ந்து கடம்பூர் அருகே உள்ள மல்லியம்மன்துர்க்கம் பகுதியில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், அதே பகுதியை மூர்த்தி (வயது 35) , சுப்பிரமணி ஆகிய இருவரும் வாழைத்தோட்டத்தில் இரண்டு நாட்டு துப்பாக்கி பதுக்கிவைத்திருந்தது தெரிந்தது.இதனையடுத்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த, போலீசார் நடத்திய விசாரணையில், விலங்குகளை வேட்டையாட அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் மூர்த்தி மற்றும் சுப்பிரமணி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.இதேபோல், கடம்பூர் அத்தியூர்புதூர் பகுதியை சேர்ந்த சதீஸ் (வயது 25) என்பவர் தனது சொந்தமான தோட்டத்தில் உள்ள முற்புதரில் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்பிரிவு போலீசார் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து சதீஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும், பறிமுதல் செய்த 3 நாட்டு துப்பாக்கியையும் தனிப்பிரிவு போலீசார் கடம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.