பவானி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆர்.என்.புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஆர்.என்.புதூர், காளியம்மன் கோவில் அருகில் வசிக்கும் தமிழரசு (21) என்பதும், 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தமிழரசை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.