பவானிசாகர் அருகே சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது‌

பவானிசாகர் அருகே உள்ள உக்கிரம் பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.;

Update: 2022-02-26 11:00 GMT

கைது செய்யப்பட்ட லூர்துசாமி.

ஈரோடு மாவட்டம் கடத்தூர் காவல் நிலையத்தில் உட்பட்ட உக்கிரம் குப்பந்துறை பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் சென்ற போது, தோட்டத்தில் கள் விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. இதனையடுத்து, கள் விற்பனையில் ஈடுபட்ட கொடிவேரி பகுதியை சேர்ந்த ராசு என்கிற லூர்துசாமி என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News