கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார்

சென்னிமலை அருகே வடமாநில வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-29 13:45 GMT

பைல் படம்.

சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 37). இவர் அப்பகுதியில், மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஈங்கூர் மற்றும் சிப்காட் சுற்றுவட்டாரத்தில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல்கிடைத்தது. அதன்பேரில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் நேரில் சென்று அருண்குமாரிடம் சோதனை செய்ததில் 150 கிராம் கஞ்சா வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1500 ஆகும். இதனையடுத்து அருண்குமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News