அந்தியூரில் இயந்திரத்தை திருடியவர் கைது
அந்தியூர் அருகே பெயிண்ட் கலக்கும் இயந்திரத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கொல்லம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் வெங்கடாசலம் என்பவர் வீடு கட்டி வருகிறார். இதையடுத்து, வெங்கடாசலத்திற்கு சொந்தமான பெயிண்ட் கலக்கும் இயந்திரத்தை, ஊஞ்சக்காட்டு காலனி பகுதியை சேர்ந்த வீரக்குமார் என்பவர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.