அந்தியூர் அருகே சாராயம் விற்றவர் கைது
அந்தியூர் அருகே சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்து, 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்;
கைது செய்யப்பட்ட முருகேசன்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மூலக்கடை பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் வெள்ளித்திருப்பூர் உதவி ஆய்வாளர் வேலுமுத்து தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தியூர் ஜி.எஸ்.காலனியை சேர்ந்த முருகேசன் (வயது 47) என்பவர் சாராயம் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.