கோபிச்செட்டிப்பாளையம் அருகே கஞ்சா விற்ற நபர் கைது

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-01-22 10:15 GMT

கைது செய்யப்பட்ட ஆனந்தன்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் சென்றபோது, மொடச்சூர் பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 1,200 கிராம் கஞ்சா, ரூ.4 ஆயிரத்து 350 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், பவானிசாகர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரிடம் கஞ்சாவை வாங்கி அப்துல்லா விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர், ஆனந்தன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News