பவானி பழைய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்ற நபர் கைது
பவானி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து, 100 கிராம் அளவுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்;
கைது செய்யப்பட்ட வடிவேல்
ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் கஞ்சா விற்பனை குறித்து போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் அளவுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.