கவுந்தப்பாடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
கவுந்தப்பாடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி வளர்மதி திரையரங்கு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கவுந்தப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னராசு தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள மறைவான இடத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட கோவில்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.