பவானி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற கணவன் - மனைவி கைது

பவானி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற அந்தியூரை சேர்ந்த கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-09 18:45 GMT

கைது செய்யப்பட்ட ராமநாதன், பழனியம்மாள்.

ஈரோடு மாவட்டம், பவானி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்குகிடமான வகையில் கொண்டிரு  ஓர் ஆணும், பெண்ணையும் விசாரித்தனர்.அப்போது அவர்கள்  வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, 1.4 கிலோ கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும் அவர்களை விசாரித்த போது, அந்தியூர் பகுதியை சேர்ந்த ராமநாதன் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம், மேச்சேரியில் இருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News