சத்தியமங்கலம் அருகே கர்நாடக அரசு பேருந்தை வழிமறித்து ரகளை: 4 பேர் கைது!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கர்நாடக அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சத்தியமங்கலம் அருகே கர்நாடக அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூரு நோக்கி கர்நாடக அரசு பேருந்தை ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கர்நாடக அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர், கல்லை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைக்க முயன்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதாக புஞ்சைபுளியம்பட்டி ஜெ.ஜெ. நகரை சேர்ந்த சஞ்சய் (வயது 25), பண்ணாரி (வயது 26), சத்தியமங்கலம் கெஞ்சனூரை சேர்ந்த அப்புசாமி (வயது 30), புஞ்சைபுளியம்பட்டி நேருநகரை சேர்ந்த ரோகித் (வயது 20) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.