சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மது விற்ற 4 பேர் கைது: ஜீப், 500 மது பாட்டில்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மது விற்ற 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஜீப், 500 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.;
சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் மது விற்ற 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஜீப், 500 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் புதூர் பிரிவு பகுதியில் கடம்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஜீப்பை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் 500 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கடம்பூர் அருகே உள்ள தொண்டூர் பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 59), கடம்பூர் கோட்டார் தொட்டியை சேர்ந்த மணிகண்டன் (60), சின்னநஞ்சன் என்பவருடைய மகன் பெரியசாமி (35), சடையப்பன் என்பவருடைய மகன் ராமர் (29) ஆகியோர் என்பதும், இவர்கள் சட்டவிரோதமாக ஜீப்பில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.