பெருந்துறை அருகே இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-05-21 01:00 GMT

பெருந்துறை அருகே இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால்மேடு பாலாஜி நகரில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், பெருந்துறை போலீசார் அங்கு திடீரென சென்று சோதனை நடத்தினர்.

இதில், அங்கு 3 இளம் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து இளம் பெண்களை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்திய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மணக்கடவு தேர்பட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் பாலமுருகன் (வயது 25) என்பவரை கைது செய்தனர்.

பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அங்கு இருந்த 22 வயது, 24 வயது, 27 வயதுடைய 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.

Similar News