ஈரோட்டில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய கில்லாடி பெண் கைது!

ஈரோட்டில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-04-22 05:20 GMT

ஈரோட்டில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு சூரம்பட்டிவலசு இந்திரா வீதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது வீட்டில் புகுந்த பெண், பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பணத்தை நேற்று முன்தினம் திருடி சென்றார்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவருடைய மனைவி ரமணி (34) என்பவர் நடராஜின் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, போலீசார் ரமணியை கைது செய்து, அவரிடம் நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், ரமணி மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Similar News