சத்தியமங்கலம் அருகே 1,008 கர்நாடக மது பாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் 1,008 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2025-01-04 03:45 GMT

கைது செய்யப்பட்ட உச்சப்பன், பறிமுதல் செய்யப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை படத்தில் காணலாம்.

சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் 1,008 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் கடம்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசாருக்கு சுஜில்கரை - கஞ்சனூர் சாலை பகுதியில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று குறிப்பிட்ட ஒருவரின் வீட்டின் பின்புறம் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு சுஜில்கரை செலுமி தொட்டியைச் சேர்ந்த ரங்கன் மகன் உச்சப்பன் (வயது 38) என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1,008 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உச்சப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News