ஈரோடு அருகே சாராயம் காய்ச்சியவர் கைது: 20 லிட்டர் ஊறல் பறிமுதல்!

ஈரோடு அருகே சாராயம் காய்ச்சியவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.;

Update: 2025-04-28 01:20 GMT

ஈரோடு அருகே சாராயம் காய்ச்சியவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு அருகே நரிப்பள்ளம் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள தோட்டத்தில் பேரல்கள் வைக்கப்பட்டு சாராயம் காய்ச்சப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராயம் காய்ச்சியதாக நரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த ரவி (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 8 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டு இருந்த 20 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News