அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா கடத்திய ஜேசிபி டிரைவர் கைது

கர்நாடகாவில் இருந்து அந்தியூர் பர்கூர் வழியாக சேலத்துக்கு இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா கடத்திய ஜேசிபி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-09-28 13:45 GMT

கைது செய்யப்பட்ட பிரகாஷ், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம்.

கர்நாடகாவில் இருந்து அந்தியூர் பர்கூர் வழியாக சேலத்துக்கு இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா கடத்திய ஜேசிபி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வாகன சோதனைச்சாவடியில் பர்கூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் இன்று (28ம் தேதி) மாலை ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகம் அளிக்கும் வகையில் யமஹா எப்இசட் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். 

சோதனையில், அவரிடம் 2 கிலோ எடையுள்ள கஞ்சா பெட்டலம் இருந்ததும், அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுக்கா காவேரிபுரம் அருகே உள்ள கருங்கல்நூர் சத்யாநகரைச சேர்ந்த தங்கமணி மகன் பிரகாஷ் (வயது 21) என்பதும், ஜேசிபி டிரைவர் என்பதும் தெரியவந்தது. 

மேலும், இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சாவை அந்தியூர் பர்கூர் வழியாக சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரிபுரம் மேட்டுபாளையூரைச் சேர்ந்த மகாராஜா (வயது 42) என்பவரிடம் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் பிரகாஷை கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News