அந்தியூரில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி: மர்ம நபருக்கு போலீஸ் வலை
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
அந்தியூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் (சௌத் இந்தியன்) இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்ததை நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் கல்லால் உடைக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த மர்ம நபர் திரும்பிச் சென்றுள்ளார். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைக்கும் சிசிடிவி காட்சிகளை கண்காணித்த பாதுகாப்பு அதிகாரி, இதுகுறித்து அந்தியூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான ஆதாரத்தை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.