பவானிசாகர் அருகே தனியார் பள்ளியில் ரூ.71 ஆயிரம் திருட்டு!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தனியார் பள்ளியில் ரூ.71 ஆயிரம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-04-27 05:30 GMT

பவானிசாகர் அருகே தனியார் பள்ளியில் ரூ.71 ஆயிரம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டியில் அவினாசி சாலையில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை, பள்ளியின் பின்கதவு பூட்டு, காசாளர் அறையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும், அங்கு மேஜை டிராயரில் இருந்த ரூ.71 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் பணம் திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News