பெருந்துறையில் பிரியாணி கடையில் ரூ.15 ஆயிரம் பணம் திருட்டு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிரியாணி கடையில் ரூ.15 ஆயிரம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .;

Update: 2025-04-26 06:50 GMT

பெருந்துறையில் பிரியாணி கடையில் ரூ.15 ஆயிரம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பூவம்பாளையம் பிரிவு பகுதியில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளவரசன் (வயது 36) என்பவர் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணி முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் மேஜை டிராயர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரத்து 647 பணத்தை காணவில்லை. இதுகுறித்து அவர் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News