நம்பியூர் அருகே வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை
நம்பியூர் அருகே வாய்க்காலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி பகுதியை சேர்ந்த சென்னியப்பன் மனைவி பழனியம்மாள். இவர் நம்பியூர் மூனாம்பள்ளி பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து, கொள்ள வாய்க்காலில் குதித்துள்ளார். அப்போது, அங்கு ரோந்து, பணியில் ஈடுபட்டக் கொண்டிருந்த நம்பியூர் போலீசார் சதீஸ் மற்றும் சங்கர்கணேஷ் இருவரும் காப்பற்ற முயன்றும் பயனின்றி பழனியம்மாள் நீரில் முழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.