டாஸ்மாக் கடை முன் ஆசிரியர் மயங்கி விழுந்து பலி
திங்களூர் அருகே டாஸ்மாக் கடை முன் உடற்கல்வி ஆசிரியர் மயங்கி விழந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.;
ஈரோடு அருகே, வெட்டுக்காட்டுவலசை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 47). தற்காலிக உடற்கல்வி ஆசிரியர். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள சுரேஷ்குமார் கடந்த, 14-ம் தேதி திங்களூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மதுவை வாங்கிய சுரேஷ்குமார், சிறுது நேரத்தில் அந்த கடை முன் கீழே விழுந்து இறந்து கிடந்தார். திங்களூர் போலீசார் அவரது உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுரேஷ்குமார் உறவினர் அளித்த புகாரின் பேரில் திங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.