பவானியில் நிபந்தனை பட்டாவை நீக்கம் செய்து பட்டா வழங்க மனு அளிப்பு

பவானி தாலுகா அலுவலகத்தில் 7வது வார்டு பொதுமக்களுக்கு நிபந்தனை பட்டாவை நீக்கம் செய்து பட்டா வழங்க சிபிஐ கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-05-26 09:15 GMT

சிபிஐ கட்சி சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திராவிடம் மனுவை அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி நிகழ்வில் பவானி தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமம் மக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று பவானி நகர சிபிஐ கட்சியின் சார்பில் பவானி நகராட்சி 7வது வார்டு திருவள்ளூர் நகரில் 160-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 32வருடங்களாக நிபந்தனை பட்டாவை கொண்டு வசித்து வருகின்றனர்.

தொடர்ந்து வீடுகளை மேம்படுத்தவும் வாரிசுகளுக்கு கொடுக்கவும் மற்றும் வங்கி கடன் அரசின் நலத்திட்டங்களை பெற தடையாக இருப்பதால் அயர்ன் பட்டாவாக மாற்றி வழங்கக்கோரி பலமுறை மனு கொடுத்ததாக தெரிவித்தனர். எனவே, நிபந்தனை பட்டாவை நீக்கம் செய்து அயர்ன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திராவிடம் மனு அளித்தனர். இதற்கு முன்பு திருவள்ளூர் நகரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகம் வந்தனர்.

Tags:    

Similar News