அந்தியூரில் வளர்ப்பு நாய் இறப்பு :பிளக்ஸ் பேனர் வைத்து கண்ணீர் அஞ்சலி
அந்தியூரில் மர்மமான முறையில் வளர்ப்பு நாய் இறந்த பிரிவுக்கு பிளக்ஸ் பேனர் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய உரிமையாளர்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். அந்தியூர் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறுப்பு வகிக்கிறார்.இவர் கடந்த 2 வருடமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இவர் வளர்த்து வந்த செல்லப்பிராணியான நாய், அப்பகுதியில் உள்ள அனைவரிடமும் அன்புடன் பழகி வந்தது. அப்பகுதியில் உள்ளோர் அந்த நாயை பூச்சி என்றும் மணி என்றும் அன்புடன் அழைத்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற நாய், தவிட்டுப்பாளையம் பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
தகவலறிந்த நாகராஜ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நாயை மீட்டனர்.இதைத் தொடர்ந்து நாகராஜுக்கு சொந்தமான இடத்தில் நாயை அடக்கம் செய்தனர்.மேலும், நாயின் இறப்பை தாங்க முடியாத நாகராஜ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயின் இறப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.