"கொரோனா மாத்திரை" என்று மோசடி - சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்

ஈரோடு அருகே கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் இருந்து வந்தாக கூறி மர்ம நபர் ஒருவர் கொடுத்த கொரோனா மாத்திரையை சாப்பிட்டதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

Update: 2021-06-26 09:45 GMT

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பனண் கவுண்டர். இவரது மனைவி மல்லிகா மகள் தீபா. இவர்களது தோட்டத்து வீட்டில் பணியாற்றுபவர் குப்பம்மாள். இவர்கள் 4 பேரும் இன்று வழக்கம் போல் தோட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமிலிருந்து வந்ததுள்ளதாக கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, தான் சத்து மாத்திரை கொண்டு வந்துள்ளதாகவும் அதனை நான்கு பேரும் உட்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய நான்கு பேரும் மர்ம நபர் கொடுத்த மாத்திரையை சப்பிட்டு உள்ளனர்.

இதனையடுத்து மாத்திரையை சாப்பிட்ட நான்கு பேருக்கும் மயக்கம் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனிடையே சத்து மாத்திரையை கொடுத்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நான்கு பேரும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர்.

இதில் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மல்லிகா உயிழந்துவிட்டார். மேலும் கருப்பணன கவுண்டர் மற்றும் அவரது மகள் தீபா ஆகிய இருவரின் உடல்நிலை மிக மோசமானதையடுத்து அவர்கள் கோவைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தோட்ட பணியாளர் குப்பம்மாள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் சம்பவ இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கப்பதிவு செய்த காவல்துறையினர் மாத்திரை கொடுத்த மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News