புகாரின் அடிப்படையிலேயே வேலுமணி வீட்டில் சோதனை: அமைச்சர் சாமிநாதன்

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வந்த புகாரின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார் .

Update: 2021-08-12 10:15 GMT

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில்  இலவச கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகம், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஏ.எம்.சி மருத்துவமனை சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு முகாமினை தொடக்கி வைத்து 28.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 1200 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் தெடர்ந்து தடுப்பூசிகள் பெறப்பட்டு இது போன்ற முகாம்கள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வந்த புகாரின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி உள்ளதாகவும், சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களைக் கொண்டு வழக்கு தொடுக்கப்படும் என்றார்.

மேலும் நிர்வாக குளறுபடி காரணமாக நிதிநிலை தற்பொழுது மோசமாக உள்ளதாகவும் அதனை சரி செய்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கான நல வாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் எனக்கூறிய அமைச்சர் நொய்யல் ஆற்றில் சுற்றுச்சூழல் மாசு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News