வெள்ளோடு அருகே மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
வெள்ளோடு அருகே இன்று அதிகாலை மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல் போலீசார் மடக்கி பிடித்தனர்.;
கரூர், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடந்த சில மாதமாக சட்டவிரோதமாக கிராவல் மண் ஈரோடு மாவட்டத்திற்கு எடுத்து வந்து விற்பனை செய்யபட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஈரோடு மாவட்டத்தில் இரவு நேரங்களில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஈரோடு மாவட்டம் வெள்ளோடு மாரியம்மன் கோவில் அருகே அரச்சலூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் வெள்ளோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 4 டிப்பர் லாரிகள் வந்தன. வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரிகளில் கிராவல் மண் இருந்தது தெரியவந்தது. கிராவல் மண் உடன் இருந்தன. எந்தவித அனுமதியும் இல்லாமல் ஈங்கூர் பகுதியில் இருந்து வெள்ளோடு வழியாக கிராவல் மண் கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இதனை அடுத்து 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டி வந்த டிரைவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிராவல் மண் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது? யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.