பெருந்துறையில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் வட்டார அளவிலான பயிற்சி

அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட வட்டார வள மையங்களில் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2021-11-19 17:30 GMT

பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்.

தமிழக அரசின் சார்பில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "இல்லம் தேடிக் கல்வி" என்ற திட்டம் குறித்த பயிற்சி அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட வட்டார வள மையங்களில் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட 121 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பெருந்துறை வட்டார வள மையத்தின் சார்பில் பெருந்துறை ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

பெருந்துறை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமி நரசிம்மன் இந்த பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலர் அமுதா முன்னிலை வகித்தார். முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் வட்டார கல்வி அலுவலர் பச்சையப்பன் வரவேற்று பேசினார். பயிற்சியின் நோக்கம் குறித்து வட்டார கல்வி அலுவலர் வனிதா ராணி விளக்கிப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் இல்லம் தேடி கல்வி குழந்தைகளுக்கு வழங்கப்படுவதின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.

இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாட கருத்துக்கள் தன்னார்வலர்கள் தேர்வு செய்யும் முறை அவர்களது பணி கிராம கல்விக் குழுவின் பணி போன்றவை குறித்தும் விளக்கி கூறப்பட்டது முகாமிற்கான ஏற்பாடுகளை பெருந்துறை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தலைமையிலான ஆசிரிய பயிற்றுனர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்

Tags:    

Similar News