வீடு இழந்த தொழிலாளிக்கு நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ
பெருந்துறை அருகே மழையால் வீடு இழந்த தொழிலாளிக்கு நிதியுதவி அளித்து ஆறுதல் கூறிய எம்எல்ஏ ஜெயக்குமார்.;
பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில், பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட நல்லாம்பட்டி காலனி பகுதியில் உள்ள சதீஷ்குமார் என்பவரின் வீடு நேற்று பெய்த மழையில் இடிந்து விழுந்தது. வீடு இழந்த சதீஷ்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து தகவலறிந்த பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், சம்பவ இடத்துக்கு நேரில் வந்து இடிந்த வீட்டினை பார்வையிட்டு சதீஷ்குமாருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தார். இந்த நிகழ்வின்போது, பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் அருள்ஜோதி செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.