9 புதிய திட்டப்பணிகள் : அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்
குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட 9 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் முத்துசாமி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.;
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான குட்டபாளையம், குமாரவலசு, முகாசிபுலவன்பாளையம் ஆகிய பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணி, குடிநீருக்கான பைப்லைன் அமைக்கும் பணி, எல்.இ.டி. மின்விளக்கு அமைக்கும் பணி , சாலைக்கு மெட்டல் அமைக்கும் பணி உள்ளிட்ட 9 புதிய திட்டப்பணிகளுக்கான துவக்க விழா இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 80.62 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். அப்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ள திட்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி இளங்கோ உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.