சென்னிமலையில் மரம் நடும் விழா: அமைச்சர் பங்கேற்பு
சென்னிமலை அருகே குளக்கரையில் மரம் நடும் விழா அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முருங்கத்தொழுவில் உள்ளது பிரம்ம லிங்கேஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு முன்பு பெரிய அளவில் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றியுள்ள பகுதி மற்றும் குளத்தின் ஏரிக்கரைகளில் மரக்கன்றுகள் நட ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.பின்னர் இதற்கான விழா முருங்கத்தொழுவு பிரம்ம லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஒளிரும் ஈரோடு அமைப்பை சேர்ந்த அக்னி சின்னசாமி தலைமை தாங்கினார். ஈரோடு கணேசமூர்த்தி, எம்.பி. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர். எஸ் செல்வம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பன்னீர்செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் அமைச்சர் மு.பெ சாமிநாதன் கலந்துகொண்டு 150 நாவல் பழ மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சி.பிரபு, தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் சா.மெய்யப்பன், முன்னாள் நகர செயலாளர் டி.என்.சின்னசாமி, ஒன்றிய பொறுப்பாளர்கள் கொடுமணல் கோபால் (மேற்கு), சதீஷ் என்கிற சுப்பிரமணியம் (கிழக்கு) ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் சாமியாத்தாள், ஆறுமுகம் மற்றும் முருங்கத்தொழுவு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக எம். சி. கந்தசாமி வரவேற்று பேசினார். முடிவில் முருங்கத்தொழுவு ஊராட்சி தலைவர் பிரபா தமிழ்செல்வன் கூறினார்.