பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.81 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை
ஏலத்திற்கு பவானி மற்றும் கவுந்தப்பாடி பகுதி விவசாயிகள் 5 ஆயிரம் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்;
பெருந்துறை வாரச்சந்தையில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு பவானி மற்றும் கவுந்தப்பாடி பகுதிகளில் இருந்து விவசாயிகள் 5 ஆயிரம் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரம் தேங்காய் ஒன்று ரூ.17 முதல் ரூ.18-க்கும், இரண்டாம் தரம் ரூ.15 முதல் ரூ.16-க்கும், மூன்றாம் தரம் ரூ.12 முதல் ரூ.13-க்கும் விற்பனை ஆனது. தேங்காய் மொத்தம் ரூ.81 ஆயிரத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர். பெருந்துறை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் தேங்காய்களை வாங்கிசென்றார்கள்.