வெளிநாட்டில் இருந்து ஈரோடு வந்த 2 பேருக்கு, 2-ம் கட்ட பரிசோதனையில் கொரோனா

வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டிற்கு இதுவரை வந்துள்ள 183 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Update: 2021-12-18 08:30 GMT

பைல் படம்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் முதல் கட்டமாக 65 பேருக்கு ஒருவாரம் முடிவடைந்ததால் அவர்களுக்கு மீண்டும் 2-வது கட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில் 2 ஆண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் உடனடியாக சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக அவர்களது சளி ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு முதல் கட்ட பரிசோதனை முடிந்து, அறிகுறிகள் இருப்பது தெரிய வந்ததால், அடுத்த கட்ட பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு ஒமிக்ரான் தொற்று உள்ளதா? என்பது குறித்து தெரியவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News