ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சி

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறுமச் செயலியல் மற்றும் தொழில்சார் கணக்குப் பதிவியல் துறையின் சார்பில் ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2025-01-03 13:30 GMT

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறுமச் செயலியல் மற்றும் தொழில்சார் கணக்குப் பதிவியல் துறையின் சார்பில் ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறுமச் செயலியல் மற்றும் தொழில்சார் கணக்குப் பதிவியல் துறையின் சார்பில் நேர மேலாண்மை மற்றும் வெற்றிகரமாக இலக்கினை அடைதல் தொடர்பான ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சி நேற்று (ஜன.2) நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் ஹெச்.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை ஞான சஞ்சீவனம் குருகுலத்தின் நிறுவனர், பேச்சாளர், ஸ்ரீ சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து மாணவர்களும் இலக்கை நிர்ணயிக்கவும், கனவை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.

தொடர்ந்து, தெளிவான நோக்கத்துடனும், வலுவான கவனத்துடனும் வெற்றியை நோக்கி பயணிக்க இன்றைய நாளில் மாணவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவரித்தார். மேலும், அவரது வாழ்வில் நேர மேலாண்மையினாலும், நேரம் தவறாமையினாலும் அவர் அடைந்த வெற்றிகள் குறித்தும் அவர் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.


நிறுமச் செயலியல் மற்றும் தொழில்சார் கணக்குப் பதிவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான அழகு அப்பன், உதவிப் பேராசிரியைகள் கௌதமி, கோகிலவாணி மற்றும் சிந்து ஆகியோருடன் அத்துறையின் பேராசிரியர்களும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இதில், சுமார் 120 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Similar News