அம்மாபேட்டை அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதி விபத்து

அம்மாபேட்டை அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதியதில் இரும்பு வியாபாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.;

Update: 2022-09-05 13:00 GMT

சண்முகம்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆரியகவுண்டனூர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (45). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா. சண்முகம் தற்போது தனது மாமியார் ஊரான செல்லிகவுண்டனூரில் வசித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் சண்முகம் வேலை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் அந்தியூர் ரோட்டில் குறிச்சி பிரிவு என்ற பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத வகையில் சண்முகம் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். இதுப்பற்றி தெரியவந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்இந்த விபத்து குறித்து கார் டிரைவரான கள்ளிப்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன உதவி மேலாளர் கார்த்திகேயனிடம் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News