பவானி கூடுதுறையில் இன்று முதல் புனித நீராட அனுமதி

அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய திரண்ட பொதுமக்கள் இன்று முதல் புனித நீராட அனுமதி அளித்துள்ளது.

Update: 2021-12-04 10:30 GMT

பவானி கூடுதுறை.

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு  கட்டுப்பாடுகளுடன், பக்தர்கள் பரிகாரம் செய்ய கடந்த 1-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் புனித நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி மக்கள் குறைந்த அளவே வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

கூடுதுறையில், நீண்ட நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் இன்று அமாவாசையொட்டி கூடுதுறைக்கு பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். கார்த்திகை அமாவாசை என்பதால் இன்று அதிகாலை முதலே கூடுதுறைக்கு பொதுமக்கள் பலர் வந்து குவிந்தனர்.

இந்நிலையில், இன்று முதல் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கூடுதுறையில் புனித நீராடினர். இதையொட்டி ஆற்றுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து சானிடைசர் மூலம் கைகள் கழுவிய பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News