பவானி கூடுதுறையில் வைகாசி அமாவாசையையொட்டி புனித நீராட குவிந்த மக்கள்

பவானி கூடுதுறையில் வைகாசி மாத அமாவாசையையொட்டி ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்‍கு தர்ப்பணம் கொடுத்தனர்.;

Update: 2022-05-30 10:23 GMT

வைகாசி மாத அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில்  குவிந்த பக்தர்கள்.

ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறைக்கு அமாவாசையையொட்டி இன்று காலை முதலே ஏராளமானோர் வந்திருந்தனர். சேலம், கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கூடுதுறையில் நீராடினர்.

தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தனர். மேலும் பொதுமக்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர். இதனால் கூடுதுறையில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

Tags:    

Similar News