சத்தியமங்கலம்: ஆசனூர் கிராமத்தில் உலா வரும் சிறுத்தையால் மக்கள் பீதி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.;
சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் கிராமத்தில் கடந்த 7ம் தேதி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று கிராமத்திற்குள் புகுந்து உலா வந்தது. அப்போது, அந்த பகுதியில் இருந்த கறிக்கடை கடைக்குள் புகுந்த சிறுத்தை 5 கோழிகளை வேட்டையாடி சென்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் ஆசனூர் கிராமத்திற்குள் அதே சிறுத்தை உலா வந்தது. பின்னர், மீண்டும் அதே கறிக்கடை முன்பு சிறிது நேரம் நின்று கொண்டிருந்தது. இதை அந்த வழியாக சென்ற ஒரு வாகன ஒட்டி தனது செல்போனில் படம் எடுத்தார்.
சிறிது நேரம் அந்த பகுதியில் உள்ள வந்த சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆசனூர் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.