சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் மக்கள் அவதி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கழிப்பிட வசதியில்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2024-12-06 09:45 GMT

சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிதலமடைந்து பராமரிப்பின்றி இருக்கும் பெண்கள் கழிப்பறையை படத்தில் காணலாம்.

Erode Today News, Erode Live Updates, Erode District News, Sathyamangalam Local News - சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கழிப்பிட வசதியில்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை, ரேஷன் கார்டு, ஆதார் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.


இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட கழிப்பிடம் சிதிலமடைந்து  புதர் மண்டி கிடக்கிறது. இதனால், கழிப்பிடத்தை சீரமைக்காததால் அருகில் உள்ள கிளை சிறை பின்புறம்  திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கின்றனர். குறிப்பாக பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சிதிலமடைந்து கிடக்கும் கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News