அந்தியூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 3 வடமாநில இளைஞர்களுக்கு அபராதம்
அந்தியூர் அருகே வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சுற்றித்திரிந்த மூன்று வட மாநில இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள மலைக் கருப்புசாமி கோவில் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,சட்டவிரோதமாக 3 இளைஞர்கள் சுற்றித் திறிந்தது தெரியவந்தது. தொடர்ந்து மூன்று இளைஞர்களையும் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் கொல்கத்தாவை சேர்ந்த ஜஹாங்கீர் (22), சலாம் ஹாசி(19), அபுல்வராசைன் மொண் (27) என தெரியவந்தது.
மேலும் இவர்கள் அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பி பாளையத்தில் செங்கல் சூலையில் பணிபுரிந்து வருபவர்கள் என்றும் இன்று பக்ரீத் விடுமுறை தினத்தை ஒட்டி மூன்று பேரும் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து மூவருக்கும் தலா ரூபாய் 2000 வீதம் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, எச்சரிக்கை செய்து வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.